ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாசித், எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்யவுள்ளதாக இன்று (28) அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் வாசித், தனது அரசியல் மற்றும் பதவிக் காலத்தில் மாவட்டத்துக்கும், பிரதேசத்துக்கும் பல்வேறு வழிகளில் சேவையாற்றியவர்.

குறிப்பாக, பொத்துவில் மக்களுடன் நீண்டகாலமாக நெருக்கமாகச் செயற்பட்டு வந்த அவர், அப்பகுதி மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் பெற்ற அரசியல் பிரமுகராகத் திகழ்ந்து வருகிறார்.
மேலும், அவர் பல சந்தர்ப்பங்களில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது இராஜினாமா தொடர்பான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி விலகலுக்கான காரணம் இதுவரைத் தெரியவில்லை.
இதேவளை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் விரைவில் பதவி விலகவுள்ளதுடன் குறித்த வெற்றிடத்திற்கு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.


Recent Comments