தற்போதைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் அமைச்சர் விஜித ஹேரத் கட்சியின் மூத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கும் முக்கியமான அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் தேசியப் பட்டியல் முஸ்லிம் அரசியல்வாதியொருவருக்கும் வடமாகாணத்தின் தமிழ் அரசியல்வாதியொருவருக்கும் பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை அண்மித்ததாக குறித்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments