மேஷம்
தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர்.பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்.
ரிஷபம்
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் மறையும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
மிதுனம்
கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்
கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். பூர்வீக மனை, விவசாய நிலங்களை விற்க முயல்வீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
சிம்மம்
கணவன் – மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து மோதல் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
துலாம்
குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம்
திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்தவர் இப்போது உங்களுக்கு உதவி செய்வார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய கிளைகளைத் திறப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
தனுசு
பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதியுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி பணிவார்.
மகரம்
நிறைவடையாமல் இருந்த வேலைகள் இன்று முடியும். தந்தையுடன் இருந்த பனிப்போர் விலகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கும்பம்
விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மீனம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.


Recent Comments