Saturday, November 14, 2026
Huisதாயகம்யாழில் போதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்..!

யாழில் போதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்..!

யாழ், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, மகன் ஆகியோர் மீது பின்னால் வந்த கே.டி.எச் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மத்துவில் தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த செல்வத்துரை செல்வவராஜ் (51) மற்றும் அவரது மகனான செல்வராஜ் தேசந்த் (09) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் பயணித்தவர்கள், வாகனத்தை சம்பவ இடத்தில் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, தப்பிச் சென்ற சாரதி உள்ளிட்டவர்களைக் கைது செய்யுமாறு கோரி, அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மதுபானம் அருந்தியிருந்தமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் கைது செய்யப்பட்ட சாரதி யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!