Saturday, November 14, 2026
Huisதாயகம்இலங்கையின் 2027 வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் நாள் விவாதம் இன்றாகும்..!

இலங்கையின் 2027 வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் நாள் விவாதம் இன்றாகும்..!

இலங்கையின் 81ஆவது வரவு செலவுத் திட்டமும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமுமான 2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த வியாழக் கிழமை (12) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதன் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

புதிய வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், 2026ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான 7.309 ட்ரில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில், 2027ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 7.933 ட்ரில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையானது 1.753 டிரில்லியன் ரூபாவாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.5 சதவீதத்திற்குச் சமமானதாகும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!