Saturday, November 14, 2026
Huisதாயகம்வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது..!

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது..!

வவுனியா வெளிவட்ட வீதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 12320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை உப பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையில், ரேவத சமந்த,மிதுசன், குமாரசிங்க சனத்,சரித் ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியாவின் பல பகுதிகளில் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் கடந்த சில வருடங்களில் திடீர் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ள போதும் வவுனியா பொலிசார் குறித்த விடயத்தை கண்டு கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!