Saturday, November 14, 2026
Huisதாயகம்தெற்கு கடலில் 101 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்பு..!

தெற்கு கடலில் 101 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்பு..!

இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் கடத்தப்பட்டு வந்த சுமார் 101 கிலோ 870 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகுடன் ஐந்து சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களும், சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (13) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் நிபுணத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளில், 52 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 58 கிலோ 736 கிராம் ஹெரோயினும், 50 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 43 கிலோ கிராம் 134 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள், போதைப்பொருட்கள் மற்றும் மீன்பிடிப் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!