Saturday, November 14, 2026
Huisதாயகம்வைத்திய சாலைகளை அபகரிப்பது ஒற்றையாட்சியின் கோரமுகத்தை வெளிப்படுத்துகிறது..!

வைத்திய சாலைகளை அபகரிப்பது ஒற்றையாட்சியின் கோரமுகத்தை வெளிப்படுத்துகிறது..!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையில் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டப் பொது வைத்திய சாலைகளையும், மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் அவிசாவளை மாவட்டப் பொது மருத்துவ மத்திய மனைகளையும் அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்வாங்குவதாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை நிர்வாக ரீதியாக நிர்க்கதியாக்கும் அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகாரம் இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கோர முகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாவட்டப் பொது மருத்துவ மனைகளை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது பற்றிய ஜனாதிபதியின் பாதீட்டு உரை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள இவ்வாறு ஊடக அறிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏற்கனவே மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற நிலையில், வடக்கின் எஞ்சிய நான்கு மாவட்டங்களின் வைத்திய சாலைகளையும் பிரதான ஒரேடியாகக் கொழும்பு கபளீகரம் செய்கின்றது. இதன் மூலம், வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் ஒரு மாவட்ட இல்லாத வைத்திய சாலை கூட அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியின் கீழ் அமைச்சரவைத் தீர்மானமொன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட அதே அதிகார அபகரிப்புத் திட்டத்தை தற்போதைய அரசாங்கமும் கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.

மாற்றம் குறித்தும், அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் பேசி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசுகளைவிடவும் வேகமாகக் கொழும்பில் குவிக்கும் வேலையில் வைத்திய சாலைகளின் உயர்த்துவதாகவும், மேம்படுத்துவதாகவும் அதிகாரங்களைக் இறங்கியுள்ளது.

தரத்தை சேவைகளை கூறிக் கொண்டு, மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்காத சூழ்நிலையில் நிறுவனங்களைப் பறித்தெடுப்பது ஜனநாயக விரோதமாகும். வடக்கின் வைத்திய சாலைகள் தரம் தாழ்ந்து காணப்படுவதற்கு, மத்திய அரசு மாகாண சபைக்குரிய நிதி ஒதுக்கீடுகளையும், ஆளணி மற்றும் வளங்களையும் திட்டமிட்டு மறுத்தமையே காரணமாகும்.

இலங்கை அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் 9வது அட்டவணையின் பிரகாரம் மாவட்டப் பொது வைத்தியசாலைகள் மாகாண சபைகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை.

இருந்தும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாத இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையும், கொழும்பில் அதிகாரங்களைக் குவிக்கும் பேரினவாத ஏகாதிபத்தியப் போக்குமே அடிப்படைக் காரணங்கள் ஆகும்.

ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் வழங்கப்படும் எந்தவொரு அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் விருப்புக்கு ஏற்ப எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்பதை இந்த அபகரிப்பு மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!