Sunday, November 29, 2026
Huisதாயகம்ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்க வேண்டும் – சாணக்கியன் எம்பி

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்க வேண்டும் – சாணக்கியன் எம்பி

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இராணுவ முகாமின் கட்டுப்பாட்டிலுள்ள, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமார் 5 ஏக்கர் காணியில் அமைந்துள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

நேற்று (28.11.2026) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுமீதான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறித்த காணியை விடுவிக்குமாறு சக பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கடந்த 2025 மார்ச் 11ஆம் திகதி, 2025 ஒக்டோபர் 23ஆம் திகதிய பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்திருந்தார்.

குறித்த காணி விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், நேற்றைய தினம் அப்பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வின் போதும் ஆயிரக் கணக்கான மக்கள் வீதியில் நின்று தமது இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குரிய காணியை விடுவித்து, 2027ஆம் ஆண்டு மக்கள் தமது உறவுகளை குறித்த இடத்தில் நினைவுகூருவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் கோரிக்கையினை இந்த சபையிலே தாம் முன்வைத்து வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!