எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் டிசம்பர் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண பரீட்சையானது நாடு முழுவதும் உள்ள 3,519 பரீட்சை மையங்களில் டிசம்பர் 8 முதல் 17 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments