மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு யாழில் சம்பவம்..!

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கட்டுவன் புலம் பகுதியில் இன்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இளைஞன் 18 வயதுடைய தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த எஸ் மாதுசன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான மின்வடத்தில் இருந்து மின்சாரம் இவரை தாக்கி உள்ளது.உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.