வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நேரியகுளம் பிரதேச வைத்திய சாலைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் அண்மையில் (03.09.2026) களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த தினத்தில் இடம்பெற்ற செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நேரியகுளம் வைத்திய சாலையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் குறித்த வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து வைத்திய சாலையின் தேவைப்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது வைத்தியசாலை தரப்பினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது செட்டிகுளம் பிரதேச சபையின் உபதவிசாளர் தே.சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர்களான சங்கரன் சசிகுமார், ரஸ்மின், சனோஜன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், பாராளுமன்ற உறுப்பினரின் வட்டார இணைப்பாளர் முனாவ்பர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.



Recent Comments