முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றியமைக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (06) புலத் சிங்களவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் பின்வாங்கப் போவதில்லை என கூறியுள்ளார்.
மேலும், ஊழலுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம் என வலியுறுத்திய அவர், ஊழல் நிறைந்த அரச கட்டமைப்பை அகற்றுவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் தெரிவித்துள்ளார்.


Recent Comments