2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ நேற்று (27) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய டிசம்பர் 5ஆம் திகதி முதல் ஜனவரி 03ஆம் திகதி வரை நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்பாடசாலை தவணை முடிவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி நிறைவு செய்யுமாறும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments