அதிபர், ஆசிரியர்கள் நாளை (30) முன்னெடுக்கவுள்ள சுகயீன விடுப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் நாளைய திங்கட்கிழமை சுகயீன விடுப்புப் போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் காணப்படும் சுபோதினி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள முரண்பாடு மற்றும் மாணவர்களின் போசாக்கு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.
எனவே, நாளைய தினம் அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் பாடசாலைக்குச் சமூகமளிக்காது தமது பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தீபன் திலீசன், மாணவர்களின் பாதுகாப்பையும் பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.


Recent Comments