அரச ஊழியர்களின் சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “தற்போது அரசாங்க சேவையில் கொடுப்பனவுகள் இரண்டு வழங்கப்படுகின்றன.
ஒன்று வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 7,500 ரூபாவும் காணப்படுகிறது.
இந்த 7500 ரூபாய் என்பது 15,750 ரூபாயினுள் சம்பள அதிகரிப்பிற்கு அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினால் அதிகரிக்கும் போது அங்கு காணப்படும் 7,500 ரூபாய் புதிதாக மீதப்படும் பகுதியாகும்.
அதனால் இந்த வருடத்தில் 5000 ரூபாவில் மீதப்படும் 3,250 ரூபாவின் 975 ரூபாவும் அதிகரிக்கப்படும். அதன்போது, அரசாங்க சேவையில் பி எல் (PL)1 தரத்தின் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிக்கும்.
அதேபோல, அரசாங்க சேவையில் ஒவ்வொருவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு 80% வீதத்தினால் உயரும். குறைந்தது 250 ரூபாய் வருடாந்த சம்பள உயர்வு 450 ரூபாய் வரை 80% வீதத்தினால் அதிகரிக்கும்.
மேலும், கிராம உத்தியோகத்தர் சேவையின் தற்போதைய சம்பளம் GN-1- 28,940 மூன்று ஆண்டுகளுக்குள் 56,630 ரூபாவாக அதிகரிக்கும்.
அதுபோல் 40,000 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு 17,500 எனப்படும் வாழ்க்கைச் செலவுப்படி அதே விதத்திலேயே சேர்க்கப்படும்.
அத்துடன், அவர்களின் மொத்த அதிகரிப்பு 21,690 ரூபாய் அதிலிருந்து 17,500 ரூபாய்களை கழித்தால் அவர்களது நிகர சம்பள அதிகரிப்பு 14,190 ரூபாவாகும். அதாவது இன்றைய நாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் 9,257 ரூபாவினால் அதிகரிக்கும்.
Recent Comments