வவுனியாவில் கல்வி அதிகாரி ஒருவருக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வவுனியாவில் கடமை புரியும் கல்வி அதிகாரி ஒருவர் கடந்த காலத்தில் ஆளும் கட்சியின் அரசியல் அதிகாரத்தை தனது தனிப்பட்ட நலன்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளதுடன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தமது பிள்ளைகளின் கல்வியை முழுமையாக அழிக்க முயன்று வருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் குறித்த விடயத்திற்கு நீதியை வேண்டி விரைவில் தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
Recent Comments