உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய போது இடம்பெற்ற நிதி மோசடி காரணமாக இடை நிறுத்தப்பட்டவர் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
திரு அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக இருந்த போது குறித்த நபரை அழைத்து வந்ததாகவும் பின்னர் உரக் கூட்டுத் தாபனத்தில் இருந்த போதே அது தொடர்பான மோசடியை செய்ததாகவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட ரீதியில் யாரையும் அவதூறாகப் பேச விரும்பாத காரணத்தினால் பெயரை வெளியிடவில்லை எனவும் நிதி மோசடி செய்பவர்கள் அமைச்சுப் பதவிகளில் இருக்கும் போது அரசாங்கம் தொடர்பில் தெளிவான சந்தேகம் எழுவது நியாயமானது எனவும் மேலும் சாணக்கியன் எம்.பி.தெரிவித்துள்ளார்.
Recent Comments