Saturday, January 24, 2026
Huisதாயகம்9 மாதங்களாக சம்பளம் இல்லை; இல்மனைட் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..!

9 மாதங்களாக சம்பளம் இல்லை; இல்மனைட் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..!

திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம்(07) காலை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக உரிய நிர்வாகத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!