யாழ் போலீஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ் போலீசார் தெரிவித்தனர்.
கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 20 லிட்டர் கசிப்பு ஆறு பரல் கோடா என்பன இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.


Recent Comments