Saturday, January 24, 2026
Huisதாயகம்மாணவிக்கு LOVE சொன்ன மாணவனுக்கு பிரம்படி-அதிபருக்கு விசாரணை; கொடி கட்டிப் பறக்கும் தமிழர் கல்வி..!

மாணவிக்கு LOVE சொன்ன மாணவனுக்கு பிரம்படி-அதிபருக்கு விசாரணை; கொடி கட்டிப் பறக்கும் தமிழர் கல்வி..!

மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாக தெரிவித்த சக மாணவனை அதிபர் பிரம்பால் அடித்ததில் மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் நேற்று (15) இடம் பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பாடசாலையில் ஆண் பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் ஜ லவ் யூ என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அது தொடர்பில் மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று குறித்த மாணவன் ஜ லவ் யு என தெரிவித்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதுடன் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!