15 வயது சிறுமியொருவர் தன் தந்தையின் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் ஒன்று தனமல்வில பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த 19ஆம் திகதி சிறுமியின் தந்தை அண்டைவீட்டை சேர்ந்த 50 வயதுமிக்க நபருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
மது அருந்திவிட்டு, தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது, சந்தேக நபர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரை பயமுறுத்தி, வீட்டின் தோட்டத்திற்கு கீழே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறிய பிறகு, தாயும் சிறுமியும் தனமல்வில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியுள்ளார்.
குறித்த நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர், 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments