Sunday, May 11, 2025
Huisதாயகம்யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்..!

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்..!

யாழில் அதிக ஹெரோயின் பாவனையால் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ் – நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதடைய ஜெ.சுகன்யன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இவர் கடந்த 23ஆம் திகதி நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார். 24ஆம் திகதி அவரை பார்வையிட்ட வேளை மயக்க நிலையில் காணப்பட்டார்.

பின்னர் அவரை யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!