இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு , அமைச்சர்களுக்கு மாதத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவும் 700 லிட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு அமைச்சருக்கு மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டு, மாதந்தோறும் 2,250 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


Recent Comments