கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை, நண்பியின் கணவருக்கு தெரியாமல் சந்திக்கச் சென்ற 44 வயது குடும்பஸ்தரான யாழ் அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த நிசாந்தன் மீது நண்பியின் கணவன் நடாத்திய கொலை வெறித்தாக்குதலில் நிசாந்தன் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இச் சம்பவம் இங்கிலாந்தின் பிறிஸ்டல் பகுதியில் இடம் பெற்றுள்ளது. கனடாவிலிருந்து சில நாட்களுக்கு முன் இங்கிலாந்துக்கு வந்திருந்த நிசாந்தன் தன்னுடன் ஒரே பாடசாலையில் கற்று வந்த நண்பியை சந்திப்பதற்காக நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஏற்கனவே கணவனால் தாக்கப்பட்டு பொலிசாரின் உத்தரவின் பேரில் நண்பியும் கணவனும் சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
கணவன் மனைவியிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முன்னரே வீட்டில் மனைவிக்குத் தெரியாது பல இடங்களில் ஏற்கனவே இரகசியக் கமராக்கள் பொருத்தி தனது செல்போனில் மனைவியின் நடவடிக்கையை கண்காணித்து வந்ததாகத் தெரிய வருகின்றது.
இந் நிலையிலேயே அங்கு நிசாந்தன் சென்று தங்கியிருப்பதை கணவன் தனது தொலைபேசியில் பார்த்துள்ளார். இதனையடுத்து பொலிசாரின் தடையையும் மீறி வீட்டில் சென்று நிசாந்தன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் மனைவியையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அயலில் இருந்தவர்கள் பொலிசாரிடம் முறையிட்டதாகத் தெரிய வருகின்றது. உடனடியாக அங்கு வந்த பொலிசார் நிசாந்தன் மற்றும் நண்பியை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததுடன் நண்பியின் கணவனையும் விலங்கிட்டு இழுத்துச் சென்றுள்ளார்கள்.
தற்போது நிசாந்தன் இரத்தம் அதிக அளவு வெளியேறிய நிலையில் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிய வருகின்றது.
நிசாந்தன் அண்மையில் யாழ் வந்து தனது 13 வயதான மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்திருந்தார். அதற்கு லண்டனிலிருந்து நிசாந்தனின் நண்பி தனியே வந்து சிறப்பித்திருந்தாராம்.
அதே போல் கடந்த வருடம் நிசாந்தனின் நண்பியின் மகளின் பூப்புனித நீராட்டுவிழா யாழில் நடந்த போது கனடாவிலிருந்து நிசாந்தனும் தனியே வந்து கலந்து சிறப்பித்திருந்ததாக இருவரது பாடசாலை நண்பர்கள் சிலர் மேலதிக தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.
Recent Comments