முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
110 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 19 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


Recent Comments