வடக்கு மாகாணத்தில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளதுடன் அதன் மூலம் மக்களின் வரிப்பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மக்களால் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உட்பட அரசிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எனினும் சிலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ள போதும் தாம் மேலதிகாரிகளால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் எழுத்து மூல முறைப்பாடுகளை வழங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பொருட் கொள்வனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு, ஏனைய கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றில் சிலர் மிக நுணுக்கமான திருட்டில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி தமது வாகன அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் செயலிலும் ஈடுபட்டுள்ளமை, அதிகார துஸ்பிரயோகம், நிர்வாக துஸ்பிரயோகம், பழிவாங்கல் போன்றன தொடர்பில் பல முறைப்பாடுகள் ஆதாரங்களுடன் செய்யப்பட்டுள்ள நிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கழுகுப் பார்வையில் சிக்குவார்களா வடக்கின் ஊழல் மன்னர்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.


Recent Comments