Thursday, July 3, 2025
Huisதாயகம்பறிபோகுமா திருக்கோணேஸ்வரர் ஆலய காணி? வெளியான தகவல்..!

பறிபோகுமா திருக்கோணேஸ்வரர் ஆலய காணி? வெளியான தகவல்..!

வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கன்னியா வெண்ணீரூற்று அருகில் காணப்படுகின்ற சுமார் 3 ஏக்கர் விஸ்திரம் உடைய காணியை சட்டவிரோத குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக கட்டிடங்கள் அமைத்து கைப்பற்றி வருவது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

திருக்கோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் இருந்த காணி அதன் உரிமையாளர்களால் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணியை கைப்பற்றும் நோக்குடன் குறித்த பகுதியை சாராத சிலரால் சட்டவிரோதமாக, அவசர அவசரமாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையிலும் சட்டத்தை மீறி கட்டிடங்களை அமைத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த ஒரு சரியான நடவடிக்கைகளும் இடம் பெறாமல் பாராதீனமாக இருப்பது குறித்த பகுதி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக சட்டவிரோத கட்டிடங்கள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!