Wednesday, July 16, 2025
Huisதாயகம்மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு; வடக்கிற்கு விதிவிலக்கு?

மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு; வடக்கிற்கு விதிவிலக்கு?

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர், வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என கல்வி பிரதியமைச்சர், டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை வடக்கில் பழிவாங்கும் நோக்கிலும், நியமன நியதிக்குப் புறம்பாகவும் ஆசிரியர் வளத்தை வீண்விரயம் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு பொறுப்பாளி யார்? நீதியான மீளாய்வு அனுர அரசால் மேற்கொள்ளப்படுமா? என்பதே எமக்கு முன்னுள்ள வினா?

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!