வீட்டில் தனியாக இருந்த போது, 17 வயது சிறுமியை, அவரது அக்காவின் காதலன் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காலி, வலஹண்துவ பகுதியை சேர்ந்த 25 வயது சந்தேக நபர், தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சிறுமியின் அக்காவை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவம் நடந்த நாளில் காதலின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர் அவருடன் வெளியே சென்றுள்ளார்.
பின்னர் கையடக்க தொலைபேசியின் சார்ஜரை காதலியின் வீட்டில் மறந்துவிட்டு வந்ததாக கூறி மீண்டும் வந்துள்ளார்.
இதன் போது வீட்டில் தனியாக இருந்த தங்கையை அவர் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் விசாரணையை தொடங்கிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை கராப்பிடிய போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Recent Comments