Thursday, August 14, 2025
Huisதாயகம்யாழில் சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாக மாயம்..!

யாழில் சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாக மாயம்..!

யாழில் பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

யாழ் – செல்லர் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி பிரதீபன் விகாசினி என்பவரை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கடந்த யூலை 15 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை போன்று சென்றுள்ளார்.

ஆனால் அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை அத்துடன் வீட்டுக்கும் வரவில்லை என குறித்த மாணவியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இன்றுடன் இரு வாரங்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என அவர் தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளதுடன் தனது மகளை கண்டுபிடித்து தர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!