பத்து வருடங்களாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் கணிசமான எண்ணிக்கையிலான மாகாண சபைகள் ஏற்கனவே செயலிழந்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களும் தெரிவித்துள்ளன.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Recent Comments