Friday, January 23, 2026
Huisதாயகம்50,000 வெற்றிடங்கள்; 40,000 பட்டதாரிகளுக்கு வேலை இல்லை - அரசாங்கத்தை சாடும் சஜித்

50,000 வெற்றிடங்கள்; 40,000 பட்டதாரிகளுக்கு வேலை இல்லை – அரசாங்கத்தை சாடும் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசுத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்த போதிலும், அண்ணளவாக 40,000 வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் கைவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் தங்கள் குறைகளை முன்வைத்த “குடிமக்களின் குரல்” நிகழ்ச்சியில் பேசிய சஜித், கடந்த தேர்தலின் போது பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் கொள்கை ஆவணத்தில் 20,000 ஆசிரியர்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் 3,000 பட்டதாரிகள், உள்ளூர் வருவாய் மற்றும் வெளிநாட்டு சேவைகளில் 3,000 பேர் மற்றும் சுற்றுலா மற்றும் தொடர்புடைய தொழில்களில் 9,000 பேர் ஆகியோருக்கான வேலை வாய்ப்புத் திட்டங்கள் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

வேலையற்ற பட்டதாரிகள் இப்போது உதவியற்றவர்களாக விடப்பட்டுள்ளனர் என்றும், அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்த சிலருக்கு இளைஞர் நிறுவனங்களில் பணிப்பாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.

இலவசக் கல்வியின் மூலம் கல்வி கற்ற பட்டதாரிகளை, உதவித் தொகையின் பயனாளிகளாக இழிவுபடுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார், மேலும், வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் வரை சமகி ஜன பலவேகயவும் அதன் பங்காளர்களும் இணைந்து ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்வோம் என்றும் கூறினார்.

உயர்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் அமைச்சரவைக் குறிப்பை மேற்கோள் காட்டி, அரச துறையில் தற்போது பட்டத் தகுதியுடன் சுமார் 50,000 வெற்றிடங்கள் உள்ளன, ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர் என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!