Tuesday, September 9, 2025
Huisதாயகம்புதைகுழிகளுக்கு வகை கூற வேண்டியவர்களே நீதி கோருகின்றனர் - மணிவண்ணன் ஆதங்கம்

புதைகுழிகளுக்கு வகை கூற வேண்டியவர்களே நீதி கோருகின்றனர் – மணிவண்ணன் ஆதங்கம்

வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு வகை கூற வேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர், இது தமிழ் மக்களின் சாபக்கேடு என சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (26) ஊடக சந்திப்பை மேற்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்காமையானது தேசியப் பரப்பில் பயணிப்பவர்கள் என்று கூறி எதிர்வரும் 29ஆம் திகதியன்று கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள முயற்சிப்பவர்களின் தேசியக் கொள்ளைக்கு எமது நிலைப்பாடு ஒத்துவராதென நினைத்திருக்கலாம்.

அவர்கள் கூட்டு என்ற போர்வையில் எதை சாதிக்க முயல்கின்றார்கள் என தெரியவில்லை. நேற்றைய தினம் கூடிய கூட்டுக்குள் பல கட்சிகளின் பிரதிநிதிகள் இராணுவத்துடன் இணைந்து ஒட்டுக் குழுவாக பல்வேறு மோசமான செயற்பாடுகளை செய்தவர்கள் என்பதை மக்கள் அறிவர்.

அதன்படி இதில் உள்ள அவர்களில் சிலர் செம்மணி உள்ளிட்ட பல கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களாகவும் இருக்கும் நிலை உருவாகலாம். எனவே இவர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் எந்தளவு வெளிப்படையானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் இருக்கும் என்பது தெரியாது.

இதேவேளை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் உண்மையானவர்களாக இல்லாது போனாலும் போராட்டம் அவசியமானது. அந்தவகையில் போராட்டத்தின் வலுவாக்கலுக்கு எமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!