மன்னார் நகரப் பகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் பதிவு செய்யப்படாது, அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.
குறித்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேற்றப்படாது புழுக்கள் இலையான் உருவாகியும், அதேநேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப் பட்டிருந்தமை, கையுறை, தலையுறை பயன்படுத்தாமலும் அத்துடன் உணவுப் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது
குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments