வவுனியா பொன்னாவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் தனது மாடு திருடப்பட்டுள்ளதாக வவுனியா நெளுக்குளம் பொலிசிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா பொன்னாவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மாடுகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பில் அவரால் வவுனியா நெளுக்குளம் பொலிசிற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பொன்னாவரசங்குளம் மக்களின் மாடுகளும் திருடப்பட்டு வந்ததால் அம் மக்களால் திருட்டைப் பிடிப்பதற்கான தீவிரமான முயற்சி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டும் வந்துள்ளது.
இந்த நிலையில் நாகர் இலுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் தொடர்ச்சியாக மாடுகள் திருடப்பட்டு பிரபல அரசியல்வாதி ஒருவரின் பின்னணியில் அறபா நகர் பகுதியில் இயங்கும் தொழுவத்திற்கு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு வெட்டுவதற்கு தயார் நிலையில் இருந்த போது பொன்னாவரசங்குள மக்களின் கடும் முயற்சியின் பயனாக மாடு வெட்டும் தொழுவத்திலிருந்து மாடு உயிருடன் மீட்கப்பட்டதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரால் வவுனியாவின் பல பகுதிகளில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் பசு மாடுகள் பல கடத்தப்பட்டு இறைச்சியாக்கப் பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வறுமைக்குள் சிக்க வைத்து மக்களை அபிவிருத்தி மாயை காட்டி அரசியல்வாதிகளிடம் கையேந்து நிலைக்கு கொண்டு வருவதற்காக எம் மக்களுக்குள் இருக்கும் சமூகப் பொறுப்பற்ற விலைபோன சில நபர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் சதி முயற்சியே இதுவாகும் என்பதுடன் இவர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய கட்சி ஒன்றில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த மாடறுக்கும் தொழுவத்தில் சட்ட நடைமுறையை பின்பற்றாது கள்ள மாடுகள் அறுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் தெற்குத் தமிழ் பிரதேச சபை விசாரணைகளை மேற்கொண்டு குறித்த கொல்களத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
Recent Comments