Wednesday, December 3, 2025
Huisகட்டுரைகள்பட்டினிப் போராட்டத்தில் பனிரெண்டு நாட்கள் - தியாக தீபம் திலீபன்

பட்டினிப் போராட்டத்தில் பனிரெண்டு நாட்கள் – தியாக தீபம் திலீபன்

ஈழத்தின் தலை யாழ்ப்பாணம், யாழின் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.

தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.

ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார்.

ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாள் செப்டம்பர் 26 1987 ல் சாவடைந்தார்.

திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!