இலங்கையில் 150,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் ஈடுபடுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உடனடி தலையீடு இல்லாவிட்டால், வரும் ஆண்டுகளில் நாட்டில் HIV மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த் தொற்றுகள் (எஸ்.டி.ஐ) கூர்மையாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி, நாடு முழுவதும் 127,511 அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் பரந்த சமூகத்தில் பதிவு செய்யப்படாத நபர்களைக் கணக்கிடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கையானது அதிகமாகவே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recent Comments