வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்திலும் கல்வியிலும், அரசியல் சூதாட்டமும் அதிகாரியினர் சிலரின் பக்கச்சார்பான செயற்பாகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புயல்நேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்திலும் கல்வியிலும், அரசியல் சூதாட்டமும் அதிகாரியினர் சிலரின் பக்கச்சார்பான செயற்பாகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆளுநர் உட்பட அதிகாரியினர் சிலர் நீதிமன்ற தீர்ப்பையும் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்ப்பையும் மீறி அரசியல் நியமனங்களை மேற்கொள்வதாக சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்திடம் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தில்தான், ஜனாதிபதி கல்வியில் ஒரு முடிவையும் பிரதமரும் கல்வி அமைச்சரும் வேறொரு முடிவையும் தொழில் பிரதி அமைச்சர் இன்னுமொரு முடிவையும் பிரதி அமைச்சர் சிலர் மற்றொரு முடிவையும் அரசியல் தொழிற் சங்க தமிழ்மொழி அழிப்பு அரசியல் அடிவருடிகள் பிறிதொரு முடிவையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் – முன்வைத்து வருகின்றனர்.
எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவை உடனடியாக சீர் செய்யாவிடின், கல்வியில் சரிவு ஏற்பட்டுப் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்
எனவே, ஆசிரியர் இடமாற்றங்கள் சீர்செய்யப்பட்டு, கல்வியில் அரசியல் தலையீடுகளை நீக்காவிடின், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வடக்கு மாகாண பாடசாலைகள் தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நேரிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recent Comments