மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று நடித்து பண மோசடியில் ஈடுபட்டவரை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி தருவதாகப் பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரை அடையாளம் காணும் அணிவகுப்பு இன்று நடத்தப்பட்ட பின்னர், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கைது செய்யப்பட்டவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளதுடன், தற்போது கல்முனையில் வாழ்ந்து வருகின்றார் என காவல்துறை தெரிவித்துள்ளது.


Recent Comments