Friday, January 23, 2026
Huisதாயகம்திலீபன் எம்பி உட்பட முன்னாள் அமைச்சர்கள் பெற்ற இழப்பீடுக்கு எதிரான மனு விசாரணைக்கு..!

திலீபன் எம்பி உட்பட முன்னாள் அமைச்சர்கள் பெற்ற இழப்பீடுக்கு எதிரான மனு விசாரணைக்கு..!

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக் கொண்ட வன்னி அபிவிருத்தி நாயகன் முன்னாள் எம்பி திலீபன் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையானதால் ஏற்பட்ட சேதங்களுக்காகச் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!