Wednesday, November 19, 2025
Huisதாயகம்ஞானசாரதேரரின் இனத்துவேஷ செயலுக்கு NNP அரசாங்கம் இடமளிக்கவே கூடாது..!

ஞானசாரதேரரின் இனத்துவேஷ செயலுக்கு NNP அரசாங்கம் இடமளிக்கவே கூடாது..!

ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்குத் தேசிய மக்கள் சக்தி அரசு இடமளிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் திருகோணமலைக்குச் சென்று, வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு பௌத்த சின்னங்களை அங்கு வைப்பதற்குத் தடையாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார் எனவும், எவ்வித காரணத்துக்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது எனவும் கூறியிருந்தார்.


இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

எமது தமிழர் தாயகத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் செயற்பாடுகளைபி பார்த்துக் கொண்டு இனியும் இருக்கமாட்டோம். அத்தோடு தேசிய மக்கள் சக்தி அரசு, ஞானசார தேரரின் இனத் துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது.” – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!