பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டில் இருந்து கால் இடறி வீழ்ந்து, பேருந்தின் நடத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறை தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்தின் நடத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
கீழே வீழ்ந்தவரின் தலை பலமாக வீதியில் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பேருந்தின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Recent Comments