கிளிநொச்சி- பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் பரீட்சை கடமையின் போது மது போதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குறித்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கடந்த 20ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த மேற்பார்வையாளர் ஒருவர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மதுபோதையில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கி உள்ளனர். மேலும், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கின் கல்வித்துறை அதிகாரிகள் உயர்தர கல்வி கலந்துரையாடலுக்கு சென்ற வேளை மது அருந்தி சர்ச்சையில் சிக்கிய போதும் விசாரணைகள் இரண்டு வருடங்கள் கடந்த போதும் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments