இந்த ஆண்டின் பாதீட்டில் கல்விக்காக இதுவரை உயர்ந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கப்படுவது மட்டும் போதுமானதல்ல, கொள்கைகள் வலுவான நிறுவன அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சுகளுக்கான பாதீட்டு ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது நவம்பர் 25ஆம் தேதி பாராளுமன்றத்தில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“கல்வியைப் பற்றி பேசும் போது, நாட்டில் தரமான கல்வி அமைப்பை உருவாக்குவதற்கு நம் முடிவுகள் உறுதியான கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். கொள்கைகளை பயனுள்ள வகையில் செயல்படுத்த வலுவான நிறுவக அமைப்பு அவசியம், மேலும் இரண்டிற்கும் போதுமான நிதியுதவி தேவை.
இந்த மூன்று அம்சங்களும் நீண்டகாலமாகப் பூர்த்தியாகாததால்தான் இன்றைய கல்வித் துறையில் காணப்படும் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன. இந்த சவால்களிடையே கூட ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பின் மூலம் கல்வித் தரத்தை நாம் தக்க வைத்திருக்க முடிந்துள்ளது.

2025 இல் மிக முக்கியமான சாதனையாக கல்வித் துறையின் முடிவெடுக்கும் செயல்முறைகளை வலுப்படுத்துவதாகும். இதில் நிறுவனங்களை அடையாளம் காணுதல், பிரச்சினைகளைக் களைவது, நிறுவன கட்டமைப்புகளை சரிசெய்தல், கொள்கைச் சட்டரீதிகளுடன் ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிதி கொள்கை முன்னுரிமைகளுக்கிணங்க செலவிடப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றைக் கொண்டு 2026ல் தொடங்கவுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு முன்னோட்டமாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல; தரமான கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திட்டமிடலும் அவசியம். அதிகாரிகளுக்கு தெளிவான இலக்குகள் வழங்கப்பட வேண்டும்; பொறுப்புகள் முறையாக ஒதுக்கப்பட வேண்டும்.
வரலாற்றில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளைக் கணிப்பதில், பாடத் திட்டங்களில் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. இது பெரும்பாலும் திட்டமிடல் குறைபாடு, நிறுவக பலவீனம் மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை ஆகியவற்றினால் கொள்கைகள் செயல்படாமல் போனதற்காகும்.
2025 இல், இந்த குறைகளைச் சமாளித்து ஒத்திசைவான நிறுவக அமைப்பை உருவாக்குவதற்கான பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.
கல்வி அமைச்சு தனது முடிவுகளை சமத்துவம் மூலம் சமஅளவு வாய்ப்புகளை வழங்குதல், தரத்தை உயர்த்துதல், நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் தரவு மற்றும் அறிவியல் பகுப்பாய்வை பயன்படுத்தி ஆதாரபூர்வமான கொள்கைகளை வடிவமைத்தல் ஆகிய நான்கு துறைகளில் மையப்படுத்தியது. இந்த நான்கு தூண்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கி, திட்டங்களைத் தயார் செய்து, நிறுவக அமைப்புகளை கட்டியமைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கல்விக்காக ரூ. 7.04 பில்லியன், அதாவது GDPயின் 2.04% ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டிலேயே நாம் GDPயின் 6% ஐ அடைவோம் என்று எப்போதும் கூறவில்லை.
இந்த இலக்கை அடைவது கொள்கை வளர்ச்சியும் வலுவான நிறுவகங்களும் தேவை என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். நிதியை ஒதுக்குவது மட்டும் போதுமானதல்ல; அது கொள்கைகளுடன் ஒத்திசைவாகவும், நிறுவனங்களை வலுப்படுத்தியும், கொள்கைகளை செயல்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.
கல்வி சீர்திருத்தங்களுக்கு கல்வி அமைச்சுக்கு ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் நடைபெற்று வரும் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான செலவீனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நமது பட்ஜெட் 2025 ஏப்ரல் இறுதியில் நிறைவேற்றப்பட்டது,.
மேலும் மே மாதத்திலிருந்து செலவீனங்கள் தொடங்கப்பட்டன. அதன்படி, நமது நிதி முன்னேற்றம் 18% ஆக இருந்தது, மேலும் டிசம்பருக்குள் அது 69% ஐ எட்டியது. கல்வித் துறையில் இதுபோன்ற திறன் முன்பு காணப்படவில்லை.
இந்த முன்னேற்றம், அதிகாரிகளுக்கு தெளிவான இலக்குகளை நிர்ணயித்ததும், நெருக்கமான கண்காணிப்பு மேற்கொண்டதும், பொறுப்புத் தன்மையை வலுப் படுத்தியதாலும் சாத்தியமானது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மேலும் அதிக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”
மேலும், இன்னும் சவால்கள் மீதமுள்ளது. பல பலவீனங்களைத் தீர்க்கும் பணியுடன், தொடர்ந்து மேம்படுத்தும் செயல்முறையுடனும் இந்த துறை முன்னேறுகிறது. திறன் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலைகளிலோ பல்கலைக்கழகங்களோ பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை அவசியம். தடைகளை குறைக்கும் பணியில் நாமும் ஈடுபட வேண்டும். இதற்காக பொறுப்பேற்பதும், கொள்கைகளை உருவாக்குவதும், திட்டங்களைத் தயாரிப்பதும், படிப்படியாக முன்னேறுவதும் அவசியம்.


Recent Comments