நாடு முழுவதும் தொடரும் கடும் மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவுகள் உள்ளிட்ட மோசமான வானிலை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தொடர்ந்தும் இடம்பெறும் பேரிடர் சூழ்நிலையில் 21 பேர் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேர் வானிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Recent Comments