முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியின் போது காணாமல் போன 5 கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுண்டிக்கும் பகுதியில் நேற்று (30) பிற்பகல் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போனதையடுத்து, அவர்களைக் கண்டுபிடிக்கக் கடற்படை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது குறித்த கடற்படை சிப்பாய்கள், அப்பகுதியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் ஒரு பகுதியினர் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Recent Comments