Friday, January 23, 2026
HuisBreakingமுல்லைத்தீவு பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைப்பாடு..!

முல்லைத்தீவு பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைப்பாடு..!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என தெரிவித்து பெண்ணொருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ் சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்று (06) குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கசிப்பு தொடர்பான நீதிமன்ற பிடியாணை மூலம் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ் போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பில் யாழ் ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பும் வகையில் அவரின் சகோதரி கருத்து தெரிவித்திருந்ததாக குற்றஞ்சாட்டியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஏழாம் திகதி கசிப்புடன் தொடர்புடைய வழக்கு ஒன்றுக்காக சிவராமலிங்கம் தர்சன் என்ற நபர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் இரவு 10:20 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையின் உள்ளே அனுமதிக்க முற்பட்ட பொழுது குறித்த நபர் (கசிப்பு சிக்) வலிப்பு காரணமாக நிலத்தில் விழுந்துள்ளார்.

இதன்பின்பு, சக கைதிகளினால் காப்பாற்றப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் முதலுதவி அளிக்கப்பட்டு சிறைச்சாலை வாகனம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், ஒன்பதாம் திகதி சிகிச்சை முடிந்து வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் பத்தாம் திகதி காலை ஏழு மணியளவில் நோய் உபாதைக்கு உள்ளாகி நோயாளர் காவு வண்டி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவரது சகோதரி முன்னுக்கு பின்னர் முரணனான தகவல்கள் மூலம் முதலில் காவல் துறையினர் தாக்கியதாகவும் மற்றும் சிறைச்சாலையில் தாக்கியதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!