Friday, January 9, 2026
HuisBreakingஅதிபர் - ஆசிரியர்களுக்கு நிவாரணம்; அரசுக்கு பறந்த கோரிக்கை..!

அதிபர் – ஆசிரியர்களுக்கு நிவாரணம்; அரசுக்கு பறந்த கோரிக்கை..!

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பிள்ளைகள் தொடர்பில் தற்போது 25,000 ரூபா பணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் ஊடாக பிள்ளைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஆனால் அதன் ஊடாக பிள்ளைகளுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் கடன்களைப் பெற்றுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

எனவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பில் ஏதேனும் ஒரு சலுகை அடிப்படையிலான முறையில் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் தலையிட்டு கடன்களை இரத்து செய்வதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!