Friday, January 23, 2026
HuisBreakingயாழில் நிவாரணத்தில் பாரபட்சம்; கிராம சேவகருக்கு எதிராக முறைப்பாடு..!

யாழில் நிவாரணத்தில் பாரபட்சம்; கிராம சேவகருக்கு எதிராக முறைப்பாடு..!

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தி அலுவலகத்தில் முரண்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது,

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் கல்லுண்டாயில் வசிக்கும் யோகநாதன் ராயித் ஆகிய எனக்கு தந்தை இல்லை. தாயின் பாராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்து வருகின்றேன். அத்துடன் நான் கல்வி கற்று வருகிறேன்.

எனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்கு வேலைக்கு சென்று 3 மாத காலமாகின்றது. ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.

எனது அம்மம்மாவும் எங்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும், முழு குடும்ப சுமையையும் எனது தாயாரே தாங்கி வருகிறார்.

எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.

ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்ல வில்லை வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளது எனவே உறவினர் சென்று பர்வையிட்டு வந்து கூறினார் .

அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியினை வழங்குவதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு எனது தாயார் கிராம சேவையாளரிடம் கேட்க அவர் அதனை மறுத்து விட்டார். குறித்த குடியிரிப்பில் வாழாத குடும்பங்களுக்கு அந்த கொடுப்பனவுக்காக பதிவு செய்யப்பட்டது, ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிகாரிகளிடமும் எனது தாயார் கதைத்து சாதகமான முடிவுகள் கிடைக்காத காரணத்தினால் அரச அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!